எஸ்.எஸ்.ராஜமௌலியின் புதிய படத்தில் இணைகிறார் ஸ்ரீதேவி!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்களில் பிரபாஸ், அனுஷ்கா கேரக்டர்களை அடுத்து முக்கியமான கதாபாத்திரம் சிவகாமி கேரக்டர்தான். இந்தக் கேரக்டருக்கு முதலில் ஸ்ரீதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும், இன்னும் சில கண்டிஷன்களாலும் வைத்தார். அதனால் ஸ்ரீதேவியை தவிர்த்த ராஜமௌலி பின்னர் அந்த கேரக்டருக்கு ரம்யாகிருஷ்ணனை தேர்வு செய்தார்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்தின் நாயகியாக ஸ்ரீதேவியை தேர்வு செய்துள்ளதாகவும், இந்த படத்தின் நாயகனாக மோகன்லால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.Tags:
#SS Rajamouli#எஸ்.எஸ்.ராஜமௌலி#தமிழ் சினிமா செய்தி#Tamil Cinematic News#நாயகியாக ஸ்ரீதேவியை தேர்வு#மோகன்லால் நடிக்கவுள்ளார்#அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளிவரும்#ஸ்ரீதேவிக்கு கோடிக்கணக்கில் சம்பளம்#Sridevi in the film#Mohanlal will be acting#Millions of salary for Sridevi#released within a few daysComments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
