Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படம்-மனைவி வேடத்தில் "வித்யாபாலன்"..

•On March 28, 2018
NTLRG_150903114416000000
Share
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர்.வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். முதலில் நடிக்க அழைத்தபோது வித்யாபாலன் எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு இந்த படத்தின் இயக்குனர் தேஜா மும்பை சென்று முழு கதையையும் சொன்னார். அதன்பிறகு கதை பிடித்து இருப்பதாக கூறி இருக்கிறார். என்.டி.ஆரின் மனைவி வேடம் என்றாலும், அவரை எதிர்த்து செயல்படும் வேடம் என்று கூறப்படுகிறது. கதை பிடித்திருப்பதாக சொல்லி இருப்பதால் இந்த வேடத்தில் வித்யாபாலன் நடிப்பது உறுதி என்று தெரிகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் இன்று தொடங்குகிறது. என்.டி.ஆர் இதே நாளில் தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். எனவே, இன்றைய தினம் அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா தொடங்குகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.