இயக்குனர் சொல்லியும் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!

சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடித்து வரும் பாலிவுட் படம் ஒன்றில் முத்தக் காட்சியில் நடிக்க சல்மான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
"ஏக்தா டைகர்" என்ற பாலிவுட் படத்தின் 2வது பாகமான "டைகர் ஜிந்தா ஹே" என்ற படத்தில் தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் நடித்து வருகின்றனர். எக்தா டைகர் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் சல்மான் கான், கத்ரீனா கைப் ஆகியோருக்கு இடையே முத்தக்காட்சியை இடம்பெற்றுள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் சல்மான்கானிடம் கூறியுள்ளார்.
ஆனால் சல்மான் கான் இந்த முத்தகாட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். பலமுறை இயக்குநர் வற்புறுத்தியும் சல்மான் கான் முத்தக்காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டாரம். "டைகர் ஜிந்தா ஹே" திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
