இம்சை அரசனின் இம்சை செப்டம்பர் முதல் ஆரம்பம்..!

இது எந்த இம்சையின்னு பாக்குரீங்களா ஆமாங்க ஒரு காமெடியன் ஒரு மிகப் பெரிய ஹீரோ அளவுக்கு வசூல் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்தப் படம் தான் "இம்சை அரசன் 23.ம் புலிகேசி" வடிவேலு என்ற காமெடி நடிகன் நடித்து கிட்டத்தட்ட பல கோடிகளை குவித்த திரைப்படம் தான் இது.
இதனை அடுத்து புயலின் வாழ்கையில் பல புயல்கள் அடித்துவிட்டு சென்றது இதனால் கிட்டத்தட்ட 4வருடங்களுக்கு பிறகு விஷாலின் "கத்திச் சண்டை" திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் அவர் ஹீரோவாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான "இம்சை அரசன் 23.ம் புலிகேசி" திரைப்படத்தின் 2.ம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தின் படபிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிருவனம் தயாரிக்கவுள்ளது, இந்த திரைப்படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
புயல் திரும்பவும் வந்துடுச்சி புயல்ல சிக்குரவங்கயெல்லாம் சின்னா பின்னம் தான்..Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
