இன்று தொடங்குகிறது ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம், அரசுப் பணிகள் முடங்கும் அபாயம்!!

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இப்படியான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று முதல் காலவரையரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவின் ஒரு பிரிவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.
ஆனால் மற்றொரு ஜாக்டோ ஜியோ பிரிவினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 27 சங்கங்களில் 6 சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதன்படி, இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நாளை மறியல் போராட்டமும் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசுப்பணிகள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
