Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆளுநருடன் மதியம் சந்திப்பு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ’க்கள் ரெடி!

•On September 7, 2017
dinakaransupporters
Share
dinakaransupporters பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கு வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை அண்மையில் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். இந்த கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை இன்று டிடிவி தினகரன் சந்தித்து பேசுகிறார். ஆளுநர் மாளிகையில் பகல் 12 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சொகுசு ஓட்டலில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னைக்கு புறப்பட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.