Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட ‘ஜாஸ்’ சினிமாஸ்!

•On November 10, 2017
j2
Share
j2 வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதால் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் இரண்டாவது நாளாக இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விவேக்குக்கு சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ஜாஸ் சினிமா என்ற பெயரில் தியேட்டர்கள் உள்ளன. இங்கு 12 தியேட்டர்கள் உள்ளன. ஒவ்வொரு தியேட்டரிலும் 1,500 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். நேற்று காலையில் வருமான வரி சோதனை தொடங்கியதை தொடர்ந்து 12 திரைகளிலும் காட்சிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தியேட்டரில் முன்பதிவு செய்து விட்டு சினிமா பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கு நேற்று தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நீடித்து இன்று 2-வது நாளாகவும் நீடிக்கிறது. இதனால் இன்றும் சினிமா காட்சிகள் தடைபட்டுள்ளது. சோதனை தொடர்வதால் இன்றைய காட்சிகளும் ரத்தானது. சோதனை நடக்கும் தகவல் தெரிந்திருந்ததால் இன்று படம் பார்க்கும் எண்ணத்தில் ரசிகர்கள் அதிக அளவில் கூடவில்லை. இருப்பினும் தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் சிலர் ஏமாற்றத்துடனேயே திரும்பிச் சென்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.