Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆகஸ்ட்-14ல் இளையராஜா - தனுஷின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்..!

•On August 11, 2014
dhanush_yuvan_raja
Share

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘வை ராஜா வை' படத்தில், யுவனின் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப்பாடலை எழுதியிருப்பவர் சாட்சாத் தனுஷே தான்.. இதில் என்ன விஷேசம் என்றால் சமீபகாலமாக தான் இசையமைக்கும் திரைப்படங்களில் கூட முன்பு போல பின்னணி பாடுவதில்லை இசைஞானி இளையராஜா.

ஆனால் தனுஷ் பாடலை யுவன் இசையில் பாடியுள்ளார் என்றால் அது விஷேசம் தானே..? ‘வை ராஜா வை’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப்பாடலை அதாவது சிங்கிள் ட்ராக்கை வரும் ஆகஸ்ட்-14ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இது ஒரு மெலடியான ‘கொலவெறி’யாக இருக்குமோ..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.