Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரவிந்த்சுவாமியின் பிறந்தநாளில் வெளியாகும் "நரகாசுரன்" படத்தின் பர்ஸ்ட் லுக்...

•On June 13, 2017
aravind
Share
aravind துருவங்கள் பதினாறு' வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் 'நரகாசுரன்'. இதில் அரவிந்த்சுவாமி, ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கவிருந்த நாக சைந்தன்யாவுக்கு பதிலாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, செப்டம்பரில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 'நரகாசுரன்' படத்தின் முக்கிய நாயகனாக நடிக்கவுள்ள அரவிந்த்சுவாமியின் பிறந்த நாளான ஜூன் 18ம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் 'நரகாசுரன்' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.