Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"அரண்மனை 2" திரைப்பட விமர்சனம்:

•On January 30, 2016
Aranmanai 2-Review
Share
Aranmanai 2-Review "அரண்மனை 1" மெகா வெற்றியில் இதோ 2'ம் பகுதி..ஹன்சிகா மட்டும் மிரட்டும் ஆவியாக அசத்தல் நடிப்பு. வழக்கமான காதல், குடும்ப கௌரவம், ஊருக்கு பெரியவங்க குடும்பத்தில் காதலால் ஏற்படும் மரணம். அந்த மரணத்தால் வம்சத்தையே அழிக்க வரும் அவளின் ஆவி. ஆவியிடமிருந்து, தங்கையை, மாப்பிள்ளையை காப்பாற்ற வரும் ஹீரோ, மோதல். கிராபிக்‌ஸ் அசத்தல்கள் சூப்பர். சித்தார்த் பெயருக்கு ஹீரோ. திரிஷா அழகு அழகு. சின்ன சின்ன கண்களை முறைத்து பார்த்து பயம் காட்ட முயற்சி செஞ்சு பாத்திருக்காங்க. ஒரே ஒரு பாடல், ஹிப்ஆப் தமிழா பெயர்கூறும். பூனம்பாஜ்வா ஒட்டவைத்த கேரக்டர். சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் சிரிக்கவைகின்றனர். அரங்க அமைப்பு பிரமாதம். U.K.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு அருமை. மொத்தத்தில், யாகம், மந்திரம், தந்திரம். நம்பூதிரிகளின் பூஜைகள் கலந்த ஆவி விரட்டு படம். கிளைமாக்ஸ் காட்சியில் "குஷ்பு" நடனம் பாராட்டலாம். "அரண்மனை 2" நடிகர் நடிகைகளின் கூட்டம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஆவி யாரென்று அறியாமல் கோவை சரளா வேனில் செய்யுற காமெடி செம கலக்கல். அதை தொடர்ந்து ஓட்டலில் நிகழும் காமெடி சூப்பர். ஹன்சிகா நாளாக நாளாக அழகாக இருப்பது ஆச்சர்யம். பேய் அழகுன்னு சொல்வாங்க. இந்த படத்துல 3 அழகான பேய்கள், ஹன்சிகா, திரிஷா, பூனம்பாஜ்வா. காமெடிக்கு கோவை சரளா, மனோபாலா, சூரி. பேய் மிரட்டல், ஆவி அட்டகாச அரண்மனை. கல கல கலர்புல் மசாலா படம். பாராட்டுக்கள்: சிறுவனின் நடிப்பு அருமை. பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படம், தியேட்டருக்கு போங்க, படம் பாருங்க மகிழ்ச்சியாக இருங்க.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.