Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அப்பாவுக்கு கபடி.. மகனுக்கு புட்பால்.. அறிமுக இசை தந்த ஆச்சர்யம்..!

•On December 5, 2014
Aivarattam_Tamil_Movie_Stills_Niranjan_Dushyanth_Nithya_Shetty_52a2631
Share

 ,

சிவகங்கை பகுதியில் பிரபலமான ஐவராட்டம் என்கிற விளையாட்டு தான் புட்பால் என்கிற உலக விளையாட்டாக மாறியிருக்கிறது என்கிற உண்மையை உரக்கச்சொல்லும் படமாக ‘ஐவராட்டம்’ படம் உருவாகியிருக்கிறது.

மிதுன் மாணிக்கம் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு சுவாமிநாதன் என்பவர் இசையமைத்து, இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் வேறு யாருமல்ல.. பிரபல கடம் வித்வானான விக்கு விநாயகத்தின் பேரனும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திற்கு இசையமைத்த செல்வகணேஷின் மகனும் ஆவார்.

அப்பாவுக்கு அறிமுகப்படமாக கபடி படம் கிடைத்தது போல, அவரது மகனுக்கு புட்பால் படம் கிடைத்திருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிநாதனை வாழ்த்த அவரது தாத்தாவும் தந்தையும் வந்து மகனை வாழ்த்தினார்கள்.

குணச்சித்திர ஜெயபிரகாஷ் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது இரண்டு மகன்களான துஷ்யந்தும், நிரஞ்சனும் இந்தப்படத்தில் இளம் ஹீரோக்களாக அறிமுகமாகியுள்ளனர். அம்ருத் கலாம் என்கிற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டும் இதில் நடித்திருக்கிறார்,. கதாநாயகியாக ஆந்திராவை சேர்ந்த நித்யா ஷெட்டி நடிக்கிறார்.

 ,

 ,

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.