Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அனிருத் இசையில் ‘கத்தி’க்காக பாடிய ஜேசுதாஸ்..!

•On September 15, 2014
yesuthas
Share

வரும் செப்-18ல் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.. ஏற்கனவே விஜய் பாடியுள்ள ‘செல்பி புள்ள’ பாடல் இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது.

இதில் இன்னொரு ஆச்சர்யகரமான விஷயமாக இந்தப்படத்தில் ஜேசுதாசும் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏற்கனவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் பிரபல பின்னணி பாடகியான ஜானகியம்மாவை பாடவைத்த அனிருத், இப்போது மகா இசைக்கலைஞரான ஜேசுதாசையும் பாடவைத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.