அதே கண்கள் படத்திற்கு 'யு' சான்றிதழ்

அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேஷன் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அதே கண்கள்'. இப்படத்தில் ஷிவதா, ஜனனி அய்யர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை சி.வி.குமாரின் 'திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் 'பைரவா' உள்ளிட்ட சில படங்கள் வெளியாக இருப்பதனால் பிப்ரவரி மாதத்தில் வெளியாக இருக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
