Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுகூட்டம் தேதி அறிவிப்பு!

•On August 28, 2017
anna
Share
anna அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் பெருவாரியானேரர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, கழக சட்ட திட்ட விதிகள் விதி எண்-19 பிரிவு-7 படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுகூட்டம் வருகின்ற (12.09.2017) செவ்வாய் கிழமை அன்று காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் திரு இ. மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.