Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வேந்தரின் கையில் விஜய் படம்!

•On June 1, 2013
images
Share
images தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தை வாங்கி வெளியிட்டு வெற்றி கண்ட வேந்தர் மூவீஸ் அடுத்து குறிவைத்திருக்கும் படம் விஜய்-விஜய்-ன் தலைவா. அதாவது விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் உரிமையை வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ். இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தலைவா. அமலா பால் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் பெரும் தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது. கேரள விநியோக உரிமையை துப்பாக்கி படத்தை வெளியிட்ட தமீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கர்நாடக உரிமையை கே.மஞ்சு பெற்றுள்ளார். படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனிடையே படத்தின் ஆடியோவை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தலைவா தவிர நளனும் நந்தினியும், சுட்ட கதை உட்பட 5 படங்களின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ் நிறுவனம். தில்லு முல்லு படத்தை தயாரித்து உள்ளது. இந்த படம் ஜூன் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.