Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிகரத்தில் தொடங்கிய விக்ரம் பிரபுவின் “சிகரம் தொடு”!!

•On May 15, 2013
Actor Prabhu Son Vikram Stills
Share
சேட்டை படத்துக்குப் பிறகு யுடிவி தயாரிக்கும் படம் சிகரம் தொடு. இது தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ் இயக்கும் இரண்டாவது படம். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜும், எதிர்நீச்சல் சதீஷும் நடிக்கின்றனர். கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் - ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். “சிகரம் தொடு” படத்தின் படப்பிடிப்பு சென்டிமென்டாக இமயமலை சிகரத்தில் உள்ள ஹரித்வார் சண்டிதேவி ஆலயத்தில் சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் இந்தப் பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது. படம் குறித்து யுடிவி தனஞ்செயன் கூறுகையில், "இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. வேகமாக படப்பிடிப்பு நடக்கிறது" என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.