Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தணிக்கைக் குழுவினர் பாராட்டிய தங்க மீன்கள்!

•On June 1, 2013
Thanga Meengal Movie Wallpapers
Share
Thanga Meengal Movie Wallpapers  , கற்றது தமிழ் என்ற உணர்ச்சிபூர்வமான படத்தை இயக்கிய ராம், சில ஆண்டுகள் கழித்து, அப்பா - மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ள படம் தங்க மீன்கள். விரைவில் வெளிவரவிருக்கும் தங்கமீன்கள் படத்துக்கு எந்த கட்டும் இல்லாமல் “யு” சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை குழு. இந்தப் படத்தில் இயக்குநர் ராம் தான் முதன்மை கதாபத்திரம் ஏற்று நடித்துள்ளார். தங்க மீன்கள் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வரும் தங்க மீன்கள் படத்தை சமீபத்தில் தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். படத்தை வெகுவாகப் பாராட்டிய தணிக்கைக் குழு உறுப்பினர்கள், இந்தப் படத்துக்கு எந்தவிதமான ஆட்சேபமும் தெரிவிக்காமல் யு சான்று அளித்தனர். இந்த மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.