Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுற்றுலா - ஒரே நாளில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களின் தொகுப்பு!!

•On October 24, 2013
IMG_1251
Share
IMG_1251 பர்பிள் விஷன் என்ற படநிறுவனம் சார்பாக எம்.ரவிக்குமார் மற்றும் வி.வெங்கட்ராமன் இணைத்து தயாரிக்கும் படம் “சுற்றுலா”. கதாநாயகனாக  எங்கேயும் எப்போதும் ,சென்னையில் ஒருநாள் போன்ற படங்களில் நடித்த மிதுன்  நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரிச்சர்டு நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீஜி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரஜன், சன்ட்ரா மற்றும் அங்கிதா, ஜெகன் சிங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரவிசாமி. இசை - பரணி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் வி.ராஜேஷ் ஆல்பர்ட் படம் பற்றி கூறும்போது, “உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு நண்பர்களின் உதவியுடன் பதிவு திருமணம் செய்ய காதலியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வருகிறான் ஹீரோ.   பதிவு திருமணத்தன்று சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடக்கின்றன. நண்பர்கள் அனைவரும் மர்மமான முறையில் மாயமாக காதலர்கள் அதிர்ச்சியில்  உறைகிரார்கள். அடுத்தடுத்து செல்போன் மூலம் மிரட்டல் தொடர காதலர்கள் தங்கள் உயிரை காப்பாற்றவும் நண்பர்கள் உயிரை காப்பாற்ற உயிருக்கு பயந்து ஓட ஆரம்பிக்கிறார்கள். இது அனைத்தும் ஒரே நாளில் நடக்கின்ற தொடர் நிகழ்வுகளை விறுவிறுப்பான முறையிலும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி உள்ளோம். கண்களுக்கு குளிர்ச்சியாகவும், இளமையாகவும் படத்தின் ஒளிப்பதிவு அமைவதற்காக ஊட்டி கோத்தகிரி, கூடலூர், குன்னூர், மைசூர் ஆகிய சுற்றுலா தளங்களில் இதுவரை யாரும் சென்று காண முடியாத அடர்ந்த காட்டு பகுதியில் புது முயற்சிக்காக படமாக்கப்படுள்ளது. விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சுற்றுலா சென்று திரும்பும்போது அந்த பயணம் எப்படி மனதில் இனிமையான நிகழ்வுகளை ஏற்படுத்துமோ, அதேபோல் இந்த “சுற்றுலா” படத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் நல்ல படம் பார்த்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.