Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படம் தயாரிக்கும் சுரேஷ் கிருஷ்ணா!!

•On September 10, 2013
IMG_2268
Share
IMG_2268 கமல் நடித்த ‘சத்யா’, ‘இந்திரன் சந்திரன்’, ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தியில் சல்மான்கான் படம் என நான்கு மொழிகளிலும் சூப்பர் மற்றும் மெகா ஸ்டார்களை வைத்து கடந்த 27 வருடங்களில் 50-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்தவர் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் கடைசியாக 2011-ல் கலைஞர் திரைக்கதை எழுதி, பாடலாசிரியர் பா.விஜய் ஹீரோவாக நடித்த ‘இளைஞன்’ என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒரு சீரியல், சன் டிவியின் மகாபாரதம் சீரியலை இயக்கினார். தற்போது ‘சுரேஷ் கிருஷ்ணா புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி புதிய தமிழ்ப்படத்தை தயாரிக்க போகிறார் சுரேஷ் கிருஷ்ணா. தலைப்பு அறிவிக்கப்படாத இப்படத்தில் ஹீரோவாக பிரின்ஸ் நடிக்க, அவருக்கு ஜோடியாக வானியா மிஷ்ரா அறிமுகமாகிறார். இவர் ‘2012 இன் மிஸ் இந்தியா’வாக செலெக்ட் ஆனவர். காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் படமாக தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க இருக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.