வைகோவுடன் “சூடா ஒரு TALK”!!

பிரபலங்களுடன் சூடாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெறும் சூடா ஒரு TALK சத்தியம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
அரசியல் கட்சித் தலைவர்களுடனும், பிரபலங்களுடனும் நடைபெறும் இந்த விறுவிறுப்பான நேர்காணல், நடுநிலையாகவும், கட்சி சார்பற்று, மக்கள் கேள்விகளுடன் மக்களின் பிரதிநிதியாயிருந்து உரையாடும் ஒரு நிகழ்ச்சியாக சூடா ஒரு TALK அமைந்துள்ளது.
வரும் வாரம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடனான பேட்டி ஒளிபரப்பாகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பது, தன் கட்சியின் வாக்கு வங்கி, ஸ்டெர்லைட் விவகாரம், தனது போராட்டம், மக்கள் மீதான அக்கறை, இரண்டு ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சி என்று எல்லாவற்றையும் விறுவிறுப்பாக பதிவு செய்திருக்கிறார் வைகோ. இந்த நேர்காணலை ஜென்னி துரை செய்திருக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
