Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வாலிபனின் புகழ் போதையால் சீரழியும் பெண்கள் வாழ்க்கை!!

•On May 13, 2013
Sokkali
Share
யுனைடட் ஸ்டார் பிக்சர்ஸ் மற்றும் எடிசன் யுனிவர்சல் என்டர்டைன்மென்ட்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘சோக்காலி’. இந்த படத்தில் சைதன்யா, ஜெயராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரீத்து, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சோனா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, சிட்டி பாபு, கராத்தே ராஜா,  மோகன்ராம், விஜய் கிருஷ்ணராஜ் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – மோகன், இசை – எஸ்.ஏ. ராஜ்குமார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் S. சரணா D.F.T. படம் பற்றி இயக்குனர் சரணாவிடம் கேட்டபோது, ”தனக்குள்ள புகழையும், அழகையும் வைத்து ஆட்டம் போடும் வாலிபனின் ஆசை விளையாட்டில் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், அப்படி பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தியின் வாழ்க்கை என்னவாகிறது, விளையாடிய அவன் என்னவாகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் சமீபத்தில் ரிஷா பங்கேற்ற “வாராவதி ஓரம் – நான் விக்கிறது காரம் வாசலைத் தேடி வந்தா ஓடிப் போகும் பாரம்” என்ற பாடல் காட்சி டி.ஆர். கார்டனில் 15 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு ராபர்ட் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அதில் 40 டான்சர்கள் பங்கேற்றனர். படம் இம்மாதம் திரைக்கு வருகிறது என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.