“அப்பா”வான சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நல்ல நேரம் போல. அடுத்தடுத்த படங்களின் வெற்றி என சந்தோஷத்தில் இருந்தவருக்கு மேலும் ஒரு சந்தோஷமான விஷயம். அவரது மனைவி ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்த காலத்திலேயே தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன். கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றிருந்தார். சிவகார்த்திகேயன் ‘மான் கராத்தே’ படப்பிடிப்பில் இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து அப்பாவாகியுள்ள சிவகார்த்திகேயனுக்கு திரையுலகிலும், அவரது நண்பர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
