Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சீறிப்பாய ஆயத்தமாகும் சிங்கம்-2!! ஜூனில் வெளியாகிறது!!

•On May 13, 2013
singam 2
Share
ஹரி இயக்கத்தில் சூர்யா - அனுஷ்கா நடித்து பெரும் வெற்றிப் பெற்ற சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் தான் சிங்கம்-2 என்ற பெயரிலேயே வெளியாகிறது. சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் ஹன்சிகா, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். கடந்த ஓராண்டு காலமாக இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் தென் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டது. ஹரியின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு அதிக நாட்கள் இந்தப் படத்துக்குத்தான் ஷூட்டிங் நடத்தப்பட்டது. எனவே கோடை ஸ்பெஷலாக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சிங்கம் 2 ரிலீஸ், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக தள்ளிப் போடப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால் அடுத்தகட்டமாக ரிலீஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளது சிங்கம் 2 யூனிட். இப்போது வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர். வரும் ஜூன் 1-ம் தேதி தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகிறது. தொடர்ந்து ஜூன் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது சிங்கம் 2. தெலுங்கில் இந்தப் படம் யாமுடு 2 என்ற பெயரில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.