Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நட்புக்காக நடித்து, பாடிகொடுத்த கொடுத்த சிம்பு!!

•On May 13, 2013
12524_thumb_665
Share
சமீபமாக  நடிகர் சிம்புவின் தோழமையை பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அவருடன் இணைத்து பேசபடுவர்களுக்கு அது அதிர்ஷ்டவசமாக உதவுகிறது. தன் நெருங்கிய தோழரும் நடிகருமான் வி.டி.வி.கணேஷ் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் 'இங்க என்ன சொல்லுது' திரைப்படத்தில் ஒரு முக்கிய  வேடமேற்று படத்துக்கு மேலும் மெருகூட்டி வருகிறார். இந்த படத்தில் சிம்புவின் பங்களிப்பு  நடிப்பு மட்டும்  தான் ஆனாலும்  தன்னை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து  கொள்ளாமல்  கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும், பங்கு கொண்டு படமாக்கும் விதத்திலும் உறுதுணையாக இருந்து இதற்கெல்லாம் மேல் எனக்காக இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார். எனக்கு நடிப்பில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் அவரது நட்புக்கு ஈடு இணை இல்லை என புகழாரம் சூட்டுகிறார் கணேஷ். மீரா ஜாஸ்மின், சந்தானம், ஸ்வர்ணமால்யா மற்றும் பலர் நடித்து உள்ள இப்படத்தின் ஒளிபதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படத்தொகுப்பு ஆண்டனி, இசை தரண்.  கதை, வசனம் வி.டி.வி.கணேஷ். இயக்கம் செல்வா. இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் பாடலுக்காக படப்பிடிப்பு குழுவினர் துபாய் செல்ல உள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.