திசை மாறிய சாமியின் புதிய படம் - கங்காரூ!!

'உயிர்', 'மிருகம்', சிந்துச் சமவெளி என பரபரப்பான படங்களையே எடுத்த இயக்குனர் சாமியின் அடுத்த படம் கங்காரு. 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி, வி.ரவிச்சந்திரன் மற்றும் முதல் பிரதி அடிப்படையில் சாமியும் இணைந்து தயாரிக்க, சாமி இயக்கும் ' கங்காரு' கொடைக்கானலில் வளர்ந்து வருகிறது.
வாழ்கையிலசந்தோஷம், துக்கம், அழுகை, சிரிப்பு, பாசம்னு ஏதோ ஒரு விஷயத்தை தெரிஞ்சோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ சுமந்துகிட்டு தான் திரியறோம். அப்படி மனசாலும், உடம்பாலும் ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் வாழ்நாளெல்லாம் சுமந்து திரிவதுதான் 'கங்காரு'.
குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுக்கக்கூடாதான்னு கேட்டாங்க. இதோ தமிழ் நாட்டுல உள்ள அம்மாக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள எல்லா அம்மாக்களுக்கும், என் அம்மாவுக்காகவும் சேர்த்து ஒரு படம் எடுக்குறேன். அது இந்த கங்காரு. தாய்ப்பாசத்துக்கு உட்சபட்ச உதாரணம் கங்காரு.
இந்த படத்தில் அர்ஜுனா என்ற பையனை அறிமுகம் செய்கிறேன். பிரணயா, சுப்ரியா என்று இரு புதுமுக நாயகிகளும் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். கதை என் உதவியாளர் எஸ்.டி.சாய்பிரசாத்துடையது. நான் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறேன்.
கவிப்பேரரசு வைரமுத்து எல்லா பாடல்களையும் பட்டை தீட்டி தந்திருக்கிறார். பாடல்கள் உங்களை நிச்சயம் உலுப்பும்.. பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது. காமெராவை முப்பத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் கையாள, கலையை தோட்டாதரணி கவனிக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
