Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நீண்ட இடைவெளிக்கு பின் ஆடிக்கலக்கும் ரோஜா!

•On September 24, 2013
DSC_7956
Share
DSC_7956 கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ்  பட நிறுவனம்  தயாரித்துக் கொண்டிருக்கும்  படம்  ‘ஆப்பிள் பெண்ணே’ இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக  ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். ரோஜா, தம்பி ராமையா, கே.ஜி.பாண்டியன், தேவா, சுசித்ரா மற்றும் சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  – ஸ்டெடிகெம் பிரபாகர், இசை – மணிசர்மா. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பேற்றிருப்பவர் ஆர்.கே.கலைமணி. படம்  பற்றி  இயக்குனர் ஆர்.கே.கலைமணி கூறும்போது, “ஆப்பிள் பெண்ணே ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை ரோஜா – ஐஸ்வர்யா மேனனை வைத்து சொல்லுகிறோம். படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளோம். தம்பி ராமையா அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார் எந்த பிரச்சனையையும் ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம். தயாரிப்பாளர் கே.ஜி.பாண்டியன் திரைக்கதையில் ட்விஸ்ட் ஏற்படுத்தும் கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் ரோஜா பாடும் பாடலில் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற கருத்தை சொல்லும் விதமாக ஒவ்வெரு காய்கறி, பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்களை உள்ளடக்கியது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறோம். இது பாட்டா மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் ஆர்.கே.கலைமணி.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.