Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராவணனின் கோட்டைக்குள் தங்கி சீதையை திருமணம் செய்யும் ராமன்!

•On August 26, 2013
seetharamula-kalyanam-lankalo-3-9
Share
seetharamula-kalyanam-lankalo-3-9 இவன், சத்ரியன், வீரய்யா, ராம்சரண், அவசர அடி ரங்கா போன்ற மொழிமாற்று படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தயாரிக்கும் படம் “ரவுடி கோட்டை”. “சீதாராம கல்யாணம் லங்கலோ” என்ற தெலுங்கு படமே “ரவுடிகோட்டை”யாகி இருக்கிறது. நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். சுமன், J.Pரெட்டி, பரமானந்தம், ஆலி மற்றும் காக்க காக்க வில்லன் சலீம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஜோஷ். இசை - அனூப் ரூபன். இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் ARK.ராஜராஜா ராவணனின் கோட்டைக்குள்ளே போய் அங்கேயே தங்கி ராமன் சீதையை திருமணம் செய்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் வில்லன் கோட்டைக்குள்ளே புகுந்து அங்கிருந்த படியே நிதின் ஹன்சிகாவை எப்படி காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை! இதை கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர் என்கிறார் ARK.ராஜராஜா. நெதர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.