Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற எஸ்.ஆர்.பிரபாகரன்!!

•On May 9, 2013
DSC_1832
Share
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வரும் இரண்டாவது படமான இது கதிர்வேலன் காதல் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சசிகுமார் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை முதல் முறையாக இயக்கி, எடுத்த எடுப்பிலேயே பெரிய இயக்குநர்கள் வரிசையில் சேர்ந்தவர் எஸ்ஆர் பிரபாகரன். அடுத்ததாக அவர் இயக்கும் படம்தான் 'இது கதிர்வேலன் காதல்'. உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா - சந்தானம் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. ரெட்ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த படத்தை 120 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு, 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிந்துள்ளது. சந்தானம் மற்றும் நயன்தாரா வேறு படங்களிலும் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக மெதுவாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், திமுக பொருளாளர் முக ஸ்டாலினை சந்தித்தார் இயக்குநர் எஸ்,.ஆர் பிரபாகரன். ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய பிரபாகரன், அவரிடம் ஷூட்டிங் பற்றிய விவரங்களைச் சொன்னார். அவருக்கு தனது மணி விழா சிறப்பிதழை வழங்கிய ஸ்டாலின், படம் பெரிய வெற்றிப் பெற வாழ்த்தினார். இந்த சந்திப்பின்  போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.