Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராமகிருஷ்ணன் இயக்கி நடிக்கும் “போங்கடி நீங்களும் உங்க காதலும்”!!

•On May 9, 2013
Pongadi
Share
பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M.A.ராமகிருஷ்ணன். கதாநாயகிகளாக மனம் கொத்திப் பறவை படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு M.V.பன்னீர்செல்வம். தமிழ்படம் கண்ணன் இசையமைக்கிறார். படத்தை இயக்கி நடிக்கும் M.A.ராமகிருஷ்ணனிடம் படம் பற்றி கேட்டோம். இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு. வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு. எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்ன ஒன்றுமே புரியல? பொண்ணுங்கள பசங்க எவ்வளவு ஏமாத்றாங்க. பசங்கள பொண்ணுங்க எவ்வளவு ஏமாத்றாங்க அப்படிங்கறத ரொம்ப ஜாலியா சொல்லுற படம் தான் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்கிறார் M.A.ராமகிருஷ்ணன்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.