இளம் நடிகர்கள் ஆதரவோடு நடிகர் சங்க தலைவராகிறாரா நாசர்??

கடந்த வாரம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால், சூர்யா, கார்த்தி, ஆர்யா, சந்தானம், ஜெயம் ரவி, ஜீவா, நிதின்சத்யா, ஆகிய இளம் ஹீரோக்களுடன் சிவக்குமார், நாசர், எஸ்.வி.சேகர், பொன்வண்ணன் ஆகியோர் ஒரு குழுவாக இருந்தனர்.
இளம் ஹீரோக்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை, நீலநிற ஜீன்ஸ் அணிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடி 33 கேள்விகளை தயார் செய்து வந்தனராம். சரத்குமாரிடம் விஷால், ஜீவா, நாசர் மூவரும் 33 கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, மூச்சு திணறிப் போகும் அளவுக்கு சரத்குமார் குரூப் சோர்வடைந்தனர்.
இதற்குப் பிறகுதான் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நாசரைத் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இந்த இளம் நடிகர்கள் படை. அடுத்து நடக்கும் நடிகர் சங்க தேர்தலில் இந்த இளம்படை நாசரைத் தலைவராக்க முடிவுசெய்து இருக்கிறதாம்!
கொசுறு செய்தி: கடந்த 21ம்தேதி நேரு ஸ்டேடியத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவிலும் நாசர் எங்கே சென்றாலும் அவர் பின்னாலேயே சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, ஆர்யா என்று நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து சென்றது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகார்த்தி இப்போது வட சென்னையின் வாலிபர்!
