Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

TEN தான் எனக்கு பிடிச்ச நம்பர் - நஸ்ரியா நஸீம்!

•On May 24, 2013
nasria
Share
நஸ்ரியா இப்போது தமிழ்திரை உலகின் தாரக மந்திரம் ஆகிவிட்டார். அழகும் திறமையும் ஒரு புறம் இருக்க அவர் தேர்ந்து எடுக்கும் படத்துக்காகவே அவரை பாராட்டலாம். 'என்னை நானே எவ்வளவு பாராட்டினாலும் தகும், TEN OUT OF TEN மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றார். TEN  நம்பர் மேல் இவ்வளவு மோகம் ஏன் என்ற கேள்விக்கு என்னுடைய முதல் படமான'  “திருமணம் எனும் நிக்கா” படத்தின் செல்ல பெயர் அது! மிக வித்தியாசமான கதை, நேர்த்தியான படமாக்கப்படும் விதம், மெய் மறக்க செய்யும் இசை, காட்சிக்காக செலவழிக்க தயங்காத தயாரிப்பு நிறுவனம், அழகான அரங்கமைப்பு, மற்றும் எனது உடை அலங்காரம் என எல்லாமே இப்படத்தின் மேல் எனக்கு உள்ள காதலை அதிகரிக்க செய்கிறது. அதிலும் தற்போது ஹைதராபாத்தில் நடந்துக் கொண்டிருக்கும் இந்த ரயில் சந்திப்பு, ரயில் சம்பத்தப்பட்ட காட்சிகள் முற்றிலும் புதிது, யதார்த்தமானது கூட! கதாநாயகன் ஜெய் இந்த படத்தின் நகைச்சுவை கலந்த காதல் வசனங்களை எனக்கு விவரித்துக் கூறி உதவுகிறார். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்திருக்கும் இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் எங்களை இடைவிடாமல் சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார். ஒரு நடிகையாக மட்டுமின்றி  ஒரு ரசிகையாகவும் இந்த படத்தை நான் மிகவும் எதிர்பார்கின்றேன்' என்று  கூறுகிறார் அழகு புயல் நஸ்ரியா நசீம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.