கட்டழகு கன்னிகளோடு ஆட்டம் போட்ட எம்.எஸ்.வி., யுவன்!!

1981-ல் கே.பாலசந்தர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நகைச்சுவையில் கலக்கிய படம் தில்லு முல்லு. 32 வருடங்கள் கழித்து வேந்தர் மூவீஸ் தயாரிக்க மிர்ச்சி சிவா நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. பத்ரி இயக்குகிறார். இசையரசர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய அன்றைய 'தில்லு முல்லு' பாடலை எம்.எஸ்.வி பாட யுவன் ஷங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்து உள்ளார். மேலும் இந்த பாடலில் இருவரும் இணைந்து கலக்கலாக ஆடியுள்ளனர். இருவரும் கட்டழகு கன்னிகள் படை சூழ காரில் வந்து கலக்குகிறார்கள். நடன இயக்குனர் பிரேம் ரஷீத் நடன காட்சிகளை அமைத்துள்ளார்.
இந்த ரீமிக்ஸ் வீடியோ குறித்து யுவன் கூறுகையில், "எம்.எஸ்.வி. சாருடன் இணைந்து அப்பா 'மெல்ல திறந்தது கதவு' படத்திற்கு இசையமைத்தார். இப்போது அவருடன் நான் இணைந்து இசையமைப்பது பெருமையாக உள்ளது. தில்லு முல்லு படத்திலிருந்து "தில்லு முல்லு" பாடலையும், "ராகங்கள் பதினாறு" பாடலையும் ரீமிக்ஸ் செய்துள்ளோம். இரண்டு புதிய பாடல்கள் டியூன் போடப்பட்டுள்ளது" என்றார்.
வேந்தர் மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் இசை வரும் ஜூன் 1ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் வெளியிடப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசசிகுமாரோடு கைகோர்த்த சந்தானம்!!
