Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மரம் நட வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பயணம் செய்த ‘சும்மா’ படக்குழு!!

•On May 14, 2013
summa
Share
சும்மா என்ற படத்தில் பணியாற்றும் குழுவினர் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றி மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அது பற்றி இயக்குனரும் படத்தின் கதாநாயகனுமான மதன் கூறியதாவது, “நான் பார்வதிபுரம், கமனம் என்ற இரண்டு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன் தற்போது சும்மா என்ற படத்தை இயக்கி நடிக்கிறேன் தயாளன் இசை அமைத்துள்ளார். ஜெய் ஒளிப்பதிவு செய்கிறார். இது காட்டிற்குள் நடக்கும் காமெடி படம் படத்தின் மைய கரு மரம்வளர்ப்பு பற்றியது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். அப்பொழுது அங்கு காடுகள் நல்ல பசுமையாக இருந்தன ஆனால் சிறிது நாட்கள் கழித்து அங்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது அங்கு காடுகள் நீர் இல்லாமல் கருகி நிலையில் இருந்தன. மனமுடைந்த நாங்கள்  இயற்கை வளங்கள் அழிவதை தடுக்க இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று 35 நாட்களில் 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு லட்சம் கையெழுத்துகள் பெற்று அதை ஜனாதிபதியிடம் வாங்குவதுதான் எங்கள் திட்டம் என்று கூறுகிறார். செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்று நடுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதன் அவர்கள் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் ஆவார். அவருடன் 5 பேர் பயணம் செய்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.