Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘பாய்ஸ்’ மணிகண்டன் வில்லனாக நடிக்கும் படம்

•On June 16, 2014
unnamed (32)
Share
unnamed (32) “முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மாத்தியோசி படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரீஷ் நடிக்கும் புதிய படம் “காதல் 2௦14”. சரவணா பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நேகா நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” படத்தில் அறிமுகமான மணிகண்டன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அப்புக்குட்டி, பசங்க சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா, ஷர்மிளா, அழகப்பன், ராஜபாண்டி, ஷிவாணி, சேலம் சின்ன கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரித்தீஷ்கண்ணா. பைசல் இசையமைக்கிறார். சேரனிடம் “ஆட்டோகிராப்” படம் வரை உதவியாளராக பணியாற்றிய சுகந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பாலசேகரன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குனர் சுகந்தன் கூறும்போது, “காதல் என்பது புனிதமானது தான். ஒவ்வொரு கலாகட்டதிலும் மாறி வந்த காதல் இன்றைய காலகட்டத்தில் அதாவது 2014ம் ஆண்டில் உருவாகும் காதல் எப்படிப்பட்டது மாறி வந்த காதலால் இன்றைய காதலர்கள் சந்திக்கு நல்லது கெட்டது பற்றி இந்த படத்தில் கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.