என்னுடைய காத்திருத்தல் வீணாகவில்லை - 'மைனா' சேது!!

தெலுங்கில் சில படங்களில் நடித்து காதல் நாயகன் என பெயரெடுத்த பிரின்ஸ் நாயகனாக அறிமுகமாக, 'மைனா' திரைப்படம் மூலமாக அறிமுகமான சேது மற்றுமொரு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவர்களது இணையாக 'தமிழ் படம்' மூலம் அறிமுகமான திஷா பாண்டே மற்றும் புது முகம் ரிச்சா பனய் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் தமிழ் திரை உலகத்தின் பிரதான நடிகர்களும் சிலர் நடிக்க உள்ள படம் மனதில் மாயம் செய்தாய்.
நாயகன் சேது இப்படத்தை பற்றி பேசுகையில் 'மைனா' படத்துக்கு பிறகு நல்ல கதைக்காகவும் அந்த கதையை நல்ல முறையில் தயாரிக்கும் நல்ல தயாரிப்பு நிறுவனத்துகாகவும் காத்து கொண்டிருந்தேன் .என் அதிர்ஷ்டம் இயக்குனர் சுரேஷ்.பி. குமார் சொன்ன கதையை Full house productions என்ற நிறுவனத்தின் சார்பில் வின்சி மன்கடம் மற்றும் ஜெய்சன் புலிகுட்டில் தயாரிக்க முன்வந்த போது, என்னுடைய காத்திருத்தல் வீணாகவில்லை என புரிந்தது' என கூறினார் .
'தெளிவான நீர் அலையில் வீசப்படும் ஒரு சிறு கல் எவ்வளவு சஞ்சலத்தை ஏற்படுத்துமோ , அதே அளவுக்கு காதலிலும் ஏற்படும் சிறு சச்சரவுகள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்ற மைய கருத்தை வைத்து இசையுடன் ஜனரஞ்சகத்தையும் கலந்து கொடுக்க இருக்கிறோம், என்னுடைய பலமாக ஒளிப்பதிவாளர் வெங்கட் அநுமான், கலை இயக்குனர் மோகன், இசை அமைப்பாளர் மனிகாந்த் கத்ரி என ஒரு திறமையான குழு இருப்பது என் அதிர்ஷ்டமே' என்கிறார். இயக்குனர் சுரேஷ் பி குமார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
