நீளமான பெயர்களால் வெற்றியை குறிவைக்கும் லியோ விஷன்!!

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடித்து, பாலாஜி தரணீதரன் இயக்கி பெரும் வெற்றி பெற்ற படம் “நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்”. இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் “இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தை தயாரிக்கும் லியோ விஷன் அடுத்ததாக யதார்த்தமான நகைச்சுவையுடன், சமூக அக்கறையை கருவாகக் கொண்ட “நாலு போலீஸும்... நல்லாயிருந்த ஊரும்” என்ற படத்தினை தொடங்கியுள்ளனர்.
இப்படத்தை N.J.ஸ்ரீகிருஷ்ணா இயக்க, லியோ விஷன் V.S.ராஜ்குமார் தயாரிக்கிறார். இவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு படத்தின் பெயரையும் படித்து முடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. ஒருவேளை பெரிய பெயர் வைத்தால் தான் பெரும் வெற்றி கிட்டுமோ?..Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
