Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குட்டிப்புலி - சன் பிக்சர்ஸ் to ரெட் ஜெயண்ட்!!

•On May 10, 2013
kutti-puli_13576376931
Share
சுந்தரபாண்டியன் வெற்றிக்கு பின் சசிகுமார் - லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள படம் குட்டிப்புலி. இந்தப் படத்தை முத்தையா எனும் புதியவர் இயக்கியுள்ளார். இவர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை வாகை சூட வா படத்தைத் தயாரித்த முருகானந்தம் தனது வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. குட்டிப்புலியின் தமிழக வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் பெற்றிருந்தது. இந்த மாதம் 17-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் குட்டிபுலியினை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விரைவில் இசை வெளியீடு நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.