ஜூன் 14-ஐ குறிவைக்கும் பெரும் புள்ளிகள்!!

வழக்கமாக மே மாதம் என்றால்தான் கோடை விடுமுறை, படங்கள் ஓடும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் உண்மை மே மாதத்தை விட பள்ளிகள் திறந்தபின் வரும் ஜூன் மாதத்தை தான் நிறைய பெரிய படங்கள் டார்கெட் வைக்கும்.
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
 ,
கடந்த பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டால், பெரும் வெற்றி பெற்ற அனைத்து படங்களும் ஜூன் மாதத்தில் தான் வெளியாகின. அந்நியன், சிவாஜி, தசாவதாரம் போன்ற வெற்றி படங்களும், ராவணன், அவன் இவன், சகுனி போன்ற பெரிய படங்களும் ஜூனில் தான் வெளியாகின.
இப்போது அந்த ஜூன் மாதத்தில் இரண்டாவது வாரத்தை குறிவைத்து மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் களம் இறங்கியுள்ளன. சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் யின் தயாரிப்பில் உருவாகியுள்ள சுந்தர்.சியின் "தீயா வேலை செய்யணும் குமாரு", ரஜினியின் தில்லு முல்லு படத்தின் ரீமேக்கான மிர்ச்சி சிவா நடிக்கும் வேந்தர் மூவீஸ்-ன் "தில்லு முல்லு" ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் தேதியை உறுதிபடுத்தியுள்ளன. இவை இரண்டும் ஜூன் 14-ல் வெளியாக இருக்கின்றன.
சூர்யா நடித்த சிங்கம் படமும் மே இறுதியில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. எனவே சிங்கம் 2 படத்தை ஜூன் இரண்டாவது வாரம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
எத்தனை படங்கள் வெளியானாலும் தியேட்டர் கிடைப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் ஜூன் முதல் வாரத்தில் மரியான், 555, யமுனா மற்றும் சில படங்களும் வெளியாகின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமாசாணி - விமர்சனம்!!
