இரண்டு அழகிகளுடன் டூயட் பாடும் ஜெய்!!

ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரே நேரத்தில் தயாரித்து வரும் ஐந்து படங்களில் ஜெய்-நஸ்ரியா நடிக்கும் திருமணம் என்னும் நிகாஹ்-ம் ஒன்று. தரமான நல்ல படங்கள் தயாரிக்க படுவதில்லை, உருவாக்கபடுகிறது. காட்சி அமைப்புக்காக செலவழிக்க தயங்காத தயாரிப்பாளர், visual taste உள்ள ஒளிப்பதிவாளர், அழகான அரங்கமைப்பு ,நல்ல கதை அம்சம், நல்ல இயக்கம், செவி குளிரும் இசை, நேர்த்தியான ஆடை அலங்காரம் எல்லோராலும் ரசிக்கப்படும் கதாநாயகன், அழகான கதாநாயகிகள் இவையே நல்ல படத்திற்கு நற்சான்றிதழ். திருமணம் எனும் நிக்கா திரைப்படம் அந்த தகுதிக்கு உட்பட்ட படம்தான்.
ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பிரம்மாண்டம், லோகநாதனின் ஒளிப்பதிவு, புதுமுக இயக்குனர் அனீசின் கதை, திரைக்கதை அமைப்பு, ஜிப்ரானின் மெய் மறக்க வைக்கும் இசை, வனிதா ஸ்ரீனிவாசனின் நேர்த்தியான ஆடை அலங்காரம், ஜெய், இரண்டு அழகான கதாநாயகிகள் நசிரியா ,மற்றும் ஹெப்பா.
இதில் ஜெய் - ஹெப்பா சம்பத்தப்பட்ட பாடல் காட்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. புது கதாநாயகி ஹெப்பா அந்த காலத்து அமலாவை நினைவு படுத்துகிறார் என்கிறார் இயக்குனர் அனீஸ் .Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசென்னை திரைப்பட கல்லூரியின் புதிய பாடதிட்டங்கள்!!
