சந்தோஷத்தோடு உடல் மெலிந்த ஹன்சிகா!!

‘மாப்பிள்ளை’ படத்துக்காக, தெலுங்கிலிருந்து ஹன்சிகாவை, தமிழுக்கு இறக்குமதி செய்தபோது, அடுத்த குஷ்பூ வந்து விட்டார் என்றனர். அந்த அளவுக்கு, கொழுக் மொழுக்கென இருந்தார். ஆனால், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வரை, அதே உடற்கட்டை மெயின்டன் பண்ணிய ஹன்சிகா, தற்போது, கடின உடற்பயிற்சி மூலம், கணிசமான எடையை குறைத்து, சிக்கென்று ஸ்லிம்மாகி விட்டார்.
இந்த திடீர் மாற்றம் குறித்து, அவர் கூறும் போது, ‘கிளாமருக்கு என் பழைய உடற்கட்டு கச்சிதமாக இருந்தது. ஆனால், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்கும் போது, பொருந்தவில்லை. அதனால், சில டைரக்டர்கள், எனக்கு ‘வெயிட்’டான வேடம் தரவும் தயங்கினர். அதன் காரணமாகவே, இப்படி எடை குறைத்து ஸ்லிம்மாகி விட்டேன்’ என்கிறார்.
தற்போது மீண்டும் சுந்தர்.சியின் அரண்மனை படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்து வருகிறார் ஹன்சிகா.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
