முதல் படத்தில் பள்ளி மாணவன் ஜி.வி.பிரகாஷ்!!

நாயகனாக அறிமுகமாக தொடர்ச்சியாக இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு வந்த ஜி.வி.பிரகாஷ், ஒரு வழியாக ஒரு படத்தை ஒகே பண்ணியுள்ளார். பென்சில் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ப்ளஸ்-2 மாணவராக நடிப்பதாக அறிவித்திருக்கிறார். சாட்டை பட பாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக சமீபத்தில் சென்னையில் உள்ள செட்டிநாடு பள்ளியில் போட்டோஷூட் நடந்து முடிந்தது. ஊதா கலரு ரிப்பன் பாணியில் இந்த படத்தில் ஒரு பாடலை வைக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅஜித் பாராட்டு, ஆர்யா நெகிழ்ச்சி!!
Next Postகேப்டன் பிலிப்ஸ் – விமர்சனம்!
