வின் டீசல் மற்றும் ராக் அதிரடியில் Fast and Furious 6!!

ஆங்கிலத்தில் ஐந்து பாகங்களாக வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த Fast and Furious படத்தின் ஆறாவது பாகம் தான் இந்த Fast and Furious 6. இரவு நேரங்களில் சாலைகளை பிளாக் செய்து விட்டு சட்டவிரோதமாக நடத்தப்படும் கார் பந்தயங்களை வைத்து சூதாடும் கும்பலை பற்றி தொடங்கப்பட்ட முதல் பாகம், பின்னர் கொள்ளை, ரிவென்ஜ் என காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி எடுக்கப்பட்டது.
The Italian job, French connection போன்ற படங்களில் இடம் பெற்றிருந்த மயிர்கூச்செறியும் சேசிங், சண்டைக்காட்சிகள் போன்று இப்படத்திலும் பார்ப்போரை இருக்கையின் நுனிக்கு இழுத்து விடும் சாகசகாட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் இறுதிக்காட்சிகள் லண்டனில் அமைக்கப்பட்டுள்ளன.
Vin Diesel, Paul Walker, Dwayne Johnson(Rock), Michelli,Jordana ஆகியோர் நடிக்க அவர்களுடன் Transporter புகழ் Jason Stathom தோன்றுகிறார். முந்தைய இரண்டு பாகங்களை இயக்கிய Justin Lin இந்த படத்தை இயக்கியுள்ளார். Chris Morgan திரைக்கதை அமைத்துள்ளார். Universal Pictures மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் மே 24-ல் இந்தியாவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postவிலைமாதுவுக்கு ஏக கிராக்கி!!
