Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரசிகர்களுக்கு தனுஷின் டபுள் போனஸ்!!

•On May 12, 2013
Ambika (2)
Share
இந்தியில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் முதல் படம் ராஞ்ஜ்னா. இந்தப் படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. இந்தப் படம் வரும் ஜூன் மாதம் தமிழ் மற்றும் இந்தியில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ஆன்ந்த் எல் ராய் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். டீன் ஏஜ் காமெடியையும் காதலையும் மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். தனுஷ் நடிப்பை ஷூட்டிங்கின்போதும், டப்பிங்கின் போதும் படக்குழு வெகுவாகப் பாராட்டியிருந்தது. இரண்டு வாரத்திற்கு முன் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் இரண்டே நாட்களில் 10 லட்சத்தை தாண்டியது. மேலும் 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். எனவே ராஞ்ஜ்னா படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்துள்ளது ஈரோஸ் இன்டர்நேஷனல்!. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்கின்றனர். இந்தியில் வெளியாகும் ஜூன் 21 ஆம் தேதியே தமிழிலும் அம்பிகாபதியை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் தனுஷ் நடித்துள்ள மரியான் படமும் மே 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. ஆக ஒரு வருடம் காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் போனஸ்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.