ஆடியோ கம்பெனி ஆரம்பித்த சேரன்!
இயக்குநர் சேரன் ட்ரீம் ஒர்க்ஸ் எனும் பெயரில் படங்கள் தயாரித்து வருகிறார். இப்போது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை தயாரித்து, இயக்கி இருக்கிறார். இதில் ‘எங்கேயும் எப்போதும்’ சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசையை ட்ரீம் சவுண்ட்ஸ் எனும் தன் சொந்த நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். சொந்தப் படம் தவிர, வெளிப்படங்களின் இசையையும் ட்ரீம் சவுண்ட்ஸ் மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். நடிகை ரோகிணி இயக்கி வரும் அப்பாவின் மீசை படத்தின் இசையை ட்ரீம் சவுண்ட்ஸ் வெளியிடும் என அறிவித்துள்ளார் சேரன். ஏற்கெனவே புத்தகங்களை வெளியிட ஒரு பதிப்பகத்தையும் சேரன் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
