Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிறந்த நாளில் ‘பிரியாணி’ தரும் கார்த்தி!!

•On May 19, 2013
24388_biryani-movie-first-look-posters-6
Share
மங்காத்தா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு மிகவும் மெதுவாக இயக்கிவரும் படம் பிரியாணி. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கார்த்தி, ஹன்சிகா மொத்வானி, பிரேம்ஜி அமரன், ராம்கி நடித்து வரும் இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வபோது ஷூட்டிங் நடந்து வருகிறது. நாயகன், நாயகி முதல் நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்ற படங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை ஒரு டீசர் கூட வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு நடிகரின் பிறந்த நாளன்று அவர்களது படத்தின் ட்ரைலர், டீசர், ஒரு பாடல், பர்ஸ்ட் லுக் போன்றவற்றை வெளியிடும் ஒரு ட்ரென்ட் தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது. தற்போது நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளன்று பிரியாணி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் இப்போது கார்த்தி தனது 36 வது பிறந்தநாளினை மே 25ம் தேதி கொண்டாடப்போகிறார். அன்றைய தினம் தன்னுடைய பிரியாணி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிரியாணி யுவன் சங்கர் ராஜாவின் 100 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.