Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

எல்ரெட் குமார் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!!

•On May 18, 2013
Anirudh-why-this-kolaveri-di-27936914-580-870
Share
3, எதிர்நீச்சல் படங்களில் அனிருத்தின் பாடல்கள் பெற்ற பெரும் வெற்றி நிறைய படங்களை அவருக்கு பெற்று கொடுத்து வருகிறது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள அனிருத், அடுத்து எல்ரெட் குமார் தனது ஆர் எஸ் இன்போடைன்மென்ட் மூலம் தயாரிக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். கோ, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களைத் தயாரித்துள்ள ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் தற்போது யான் படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து எல்ரெட் குமார் முழுக்க, முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் காதல் படத்தை தயாரிக்கிறார். இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக அனிருத்துக்கு பெரிய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.