Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

8 தோட்டாக்கள் படத்தை பாரட்டும் திரையுலக நட்சத்திரங்கள்...

•On April 7, 2017
thotta
Share
thotta ‘8 தோட்டாக்கள்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும், ‘8 தோட்டாக்கள்’ படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் புதுமுகம் வெற்றி - அபர்ணா பாலமுரளி - எம் எஸ் பாஸ்கர் - நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். ‘‘வயதான பிறகு நம் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி இருக்கின்றது ‘8 தோட்டாக்கள்’. நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும்‘ என்று கூறியிருக்கிறார் ‘துருவங்கள் 16’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.