குழந்தைகள் கொண்டாடும் ஆலம்பனா

"ஆலம்பனா" படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது.
"விஸ்வாசம்" படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரும் வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் "முண்டாசுப்பட்டி", "இன்று நேற்று நாளை" ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதிநாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே "ஆலம்பனா" தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். நடிகர் பாண்டியராஜன், முரளிசர்மா ஆகியோர் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க, "வேதாளம்" படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.
மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான "கோமாளி" படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். வினோத் ராமசாமி ஒளிப்பதிவை செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.
ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
