Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

555 மாதிரி 22-22க்கும் பரத்துக்கும் என்ன சம்பந்தம்..?

•On August 19, 2014
IMG_4656
Share

‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தின் மூலம் வரும் ஆகஸ்ட்-22ஆம் தேதி திரையரங்குகளில் உங்களை சந்திக்க வருகிறார் பரத். கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை புதுமுகம் எல்.ஜி.ரவிச்சந்தர் என்பவர் இயக்குகிறார்.

பரத்திற்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ‘சூதுகவ்வும்’ கருணா, மனோபாலா உள்ளிட்ட 22 நகைச்சுவை நடிகர்கள் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள் (சம்பந்தம் வந்துருச்சு பார்த்தீங்களா?). யுகபாரதி மற்றும் கானா பாலாவின் பாடல்களுக்கு சைமன் என்பவர் இசையமைக்கிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டுள்ள இந்தக்கதையில் பரத்தும் நந்திதாவும் போட்டிபோட்டு நகைச்சுவை காட்சிகளில் கலக்கி இருக்கிறார்களாம். குறிப்பாக திருமண காட்சி ஒன்றில் நந்திதா தனக்கு வந்த சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டே இருந்தாராம். பின்னே ஒரு காமெடி நடிகர் இருந்தாலே சிரிப்பை அடக்குவது கஷ்டம் எனும்போது 22 நகைச்சுவை நடிகர்களும் ஒரே காட்சியில் நடித்தால் கேட்கவா வேண்டும்.

ஆகவே, வரும் 22ஆம் தேதி ஒரு புதுவிதமான காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.