500 ரூபாய் வாங்கிக் கொண்டு டிக்கெட் தராத தியேட்டர், தல ரசிகர்கள் ஆவேசம்!

சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'விவேகம்'. நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தாம்பரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் 'விவேகம்' படத்தின் டிக்கெட்டிற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக சினிமா ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த திரையரங்கில் முதல்நாள் முதலிரண்டு காட்சிகளுக்கு ரூபாய் 500ம், அதைத் தொடர்ந்த மற்ற காட்சிகளுக்கு ரூபாய் 300ம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. திரையரங்க நிர்வாகம், கட்டணத்தை வசூலித்துவிட்டு டிக்கெட் தராததால் கோபமடைந்த 100–க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொடுத்த பணத்துக்கு டிக்கெட் கொடுங்கள், இல்லாவிட்டால் அதற்கான ரசீது கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். இதனிடையே ரசிகர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து திரையரங்கிற்குச் சென்ற தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன், இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்ட உரிமையாளர், கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
